வரும் ஜனவரி 23ம் தேதி புதிய ஹைபிரிட் மாடல் இரு சக்கர வாகனத்தை வெளியிட உள்ளதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் 'புதிய ஸ்மார்ட் வாகனம் வரவுள்ளது' என கூறப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா போன்ற பிரபல மாடல் ஒன்றில் ஹைபிரிட் மாடல் அறிமுகப்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த ஹைபிரிட் தொழில்நுட்பம் மூலம் 10 முதல் 15 கிலோமீட்டர் வேகம் வரை முழுவதுமாக மின்சாரத்தில் கொண்டுவரப்பட உள்ளது. இதனால் வாகனத்தின் செயல்திறன் அதிகரிக்கப்பட்டு, வாடிக்கையாளர்களுக்கு செலவுகள் குறைக்கப்படும் என கருதப்படுகிறது.
மேலும், ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், டிசம்பர் மாத விற்பனை குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில் டிசம்பர் மாத விற்பனையில் 11% வளர்ச்சி பதிவு செய்யப்பட்டு, 250171 வாகனங்கள் மொத்தமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.














