ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்

March 20, 2024

ஹாங்காங்கில் அரசுக்கு எதிரானவர்கள் மீது பயன்படுத்தக்கூடிய வகையில் ஒரு சட்டத்தை பேரவை நிறைவேற்றி உள்ளது. ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு மசோதா பேரவையில் கொண்டுவரப்பட்டது. அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை விதிக்கும் அம்சங்களை 23வது சட்டப்பிரிவாக சேர்ப்பதற்காக சீனாவால் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் பேரவை உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவாக வாக்களித்தனர். அதையடுத்து இந்த மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து பேரவை தலைவர் ஆண்ட்ரூ கூறுகையில், தேசிய பாதுகாப்பு […]

ஹாங்காங்கில் அரசுக்கு எதிரானவர்கள் மீது பயன்படுத்தக்கூடிய வகையில் ஒரு சட்டத்தை பேரவை நிறைவேற்றி உள்ளது.

ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்பு மசோதா பேரவையில் கொண்டுவரப்பட்டது. அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை விதிக்கும் அம்சங்களை 23வது சட்டப்பிரிவாக சேர்ப்பதற்காக சீனாவால் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் பேரவை உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவாக வாக்களித்தனர். அதையடுத்து இந்த மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இது குறித்து பேரவை தலைவர் ஆண்ட்ரூ கூறுகையில், தேசிய பாதுகாப்பு காவல் மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியாகும். தலைமை ஆட்சியாளர் காசியு கூறியதைப் போல் இந்த மசோதா விரைவாக சட்டம் ஆக்கப்பட்டால் ஹாங்காங்கின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றார். வரும் சனிக்கிழமை முதல் இந்த சட்டம் அமலுக்கு வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கு ஆதரவாக ஹாங்காங்கில் எழும் குரல்களை நசுக்கும் வகையில் இந்த புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். ஏனெனில் இந்த சட்டத்தில் பல கடுமையான அம்சங்கள் உள்ளதே காரணமாகும். எனினும் ஹாங்காங்கின் பொருளாதார வளர்ச்சிக்கு இந்த சட்டம் ஏதுவாக இருக்கும் என்று சீன ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu