2025 ஜனாதிபதி விருதுகள் தமிழக போலீசாருக்கு 23 பேருக்கு வழங்கப்பட உள்ளது.
இந்தியாவின் குடியரசு தினத்தையொட்டி, சிறப்பாக பணியாற்றிய மாநில போலீசாருக்கு ஜனாதிபதி விருதுகள் வழங்கப்படும். இந்த ஆண்டு 746 பேர் விருதுகளைப் பெற்றுள்ளனர். அதில், தமிழக காவல்துறையில் சிறப்பாக செயல்பட்ட 23 பேர் விருது பெற்றுள்ளனர்.
இந்த ஆண்டுக்கான விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாளை டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் வழங்கி கவுரவிக்க உள்ளார். விருது பெறுபவர்கள் பட்டியல் காவல்துறை அதிகாரிகள் ஜ.ஜி.க்கள் துரைக்குமார், ராதிகா, போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெயலட்சுமி, ஜி.ஸ்டாலின் உள்ளிட்ட 21 பேர் உள்ளனர்.