ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி தலைவர்களுக்கு வீட்டுக்காவல்

February 22, 2024

ஆந்திராவில் இன்று வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க கோரி தலைமைச் செயலகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று தலைமைச் செயலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க கோரி இந்த போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆங்காங்கே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை போலீசார் வீட்டு காவலில் வைத்துள்ளனர். இந்நிலையில் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் […]

ஆந்திராவில் இன்று வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க கோரி தலைமைச் செயலகம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று தலைமைச் செயலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க கோரி இந்த போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் ஆங்காங்கே கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலரை போலீசார் வீட்டு காவலில் வைத்துள்ளனர். இந்நிலையில் ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஒய்.எஸ் ஷர்மிளா விஜயவாடாவில் உள்ள ஆந்திர ரத்ன பவனில் தங்கினார். மேலும் அவர் ஜனநாயக நாட்டில் போராட்டம் நடத்தக்கூட உரிமை இல்லையா? இங்கு போலீசார் தடுப்பு அமைத்து உள்ளனர் என்று கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் எங்களை தடுத்து நிறுத்தும் முயற்சி உங்கள் இயலாமை காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu