கடந்த 2022 ஆம் ஆண்டில், இந்தியாவில், வீடுகளின் விலைகள் சராசரியாக 7% உயர்ந்துள்ளதாக, ப்ராப் டைகர் டாட் காம் தெரிவித்துள்ளது. கட்டுமானத்துறை பொருட்களின் விலைகள் உயர்ந்ததால், வீடுகளின் விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில், ஒரு சதுர அடிக்கு 6700 முதல் 6900 வரை விலை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில், அதிகபட்சமாக, குருகிராம் பகுதியில், வீடுகளின் விலையில் 13% உயர்வு பதிவாகியுள்ளது. ஆனால், இந்த விலை உயர்வு வீடு விற்பனையை பாதிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக, பெங்களூரு மற்றும் டெல்லி என் சி ஆர் பகுதியில் 9% உயர்வும், புனே பகுதியில் 8% உயர்வும் பதிவாகியுள்ளது. மேலும், அகமதாபாத் மற்றும் கொல்கத்தா நகரங்களில் வீடு விலைகளில் 7% உயர்வு பதிவாகியுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை, வீடுகளின் விலையில் 5% உயர்வு பதிவாகியுள்ளது. சென்னையில் ஒரு சதுர அடிக்கு சராசரியாக 5600 முதல் 5800 ரூபாய் வரை விலை உயர்வு பதிவாகியுள்ளது. இறுதியாக, ஹைதராபாத்தில் 4% விலை உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.