விலை உயர்வு காரணத்தால், இந்தியாவில் வீடுகள் விற்பனை சரிந்துள்ளதாக புள்ளிவிவர தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், வீடுகள் விற்பனை எண்ணிக்கை காலாண்டு அடிப்படையில் 8% வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த காலகட்டத்தில், இந்தியாவின் முக்கிய 7 நகரங்களில், 120340 எண்ணிக்கையிலான வீடுகள் விற்பனையாகியுள்ளன. இதுவே, கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 130170 வீடுகள் விற்பனையாகியுள்ளன. மேலும், வருடாந்திர அடிப்படையில் வீடுகள் விற்பனை 5% உயர்வை சந்தித்துள்ளது. இந்த காலாண்டில் பதிவாகியுள்ள மொத்த விற்பனை அளவில், புனே மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் 52% வீடுகள் விற்பனை பதிவாகியுள்ளது.