வீடு விற்பனை 50% உயர்வு; புதிய வீடுகள் எண்ணிக்கை 101% உயர்வு

December 29, 2022

இந்தியாவில், 2022ஆம் ஆண்டில், ரியல் எஸ்டேட் விற்பனை 50% அதிகரித்துள்ளது. அத்துடன், புதிய வீடுகளின் எண்ணிக்கை 101% உயர்ந்து, 431510 ஆக உள்ளது. பிரபல ரியல் எஸ்டேட் முகவர் தளமான ப்ராப் டைகர் டாட் காம் (PropTiger.com) இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் தரவுகள் படி, “2021 ஆம் ஆண்டில் 205940 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுவே, 2022 ஆம் ஆண்டில் 308940 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, அகமதாபாத், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, […]

இந்தியாவில், 2022ஆம் ஆண்டில், ரியல் எஸ்டேட் விற்பனை 50% அதிகரித்துள்ளது. அத்துடன், புதிய வீடுகளின் எண்ணிக்கை 101% உயர்ந்து, 431510 ஆக உள்ளது. பிரபல ரியல் எஸ்டேட் முகவர் தளமான ப்ராப் டைகர் டாட் காம் (PropTiger.com) இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் தரவுகள் படி, “2021 ஆம் ஆண்டில் 205940 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுவே, 2022 ஆம் ஆண்டில் 308940 வீடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, அகமதாபாத், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், கொல்கத்தா, டெல்லி என் சி ஆர், மும்பை எம் எம் ஆர் ஆகிய இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் வீடு விற்பனை அதிகரித்துள்ளது. தற்போது, விற்பனைக்கு தயாராக உள்ள வீடுகளில் 80% கட்டுமான கட்டத்திலும், 20% நிறைவடைந்த கட்டத்திலும் உள்ளன”.

இந்தியாவில் அதிக வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் துறையாக ரியல் எஸ்டேட் துறை உள்ளது. எனவே, இந்த துறையின் வளர்ச்சி, நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை எதிரொலிப்பதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu