இந்திய பெருங்கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ஹவுதி அமைப்பினர் கூறியுள்ளனர்.
இது குறித்து ஹவுதி பழங்குடியின பிரிவு தலைவர் அப்துல் மாலிக் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்படுவதாவது இஸ்ரேலுடன் தொடர்புடைய கப்பல்கள் அரபிக் கடல், செங்கடல், ஏடன் வளைகுடா வழியாக செல்வதை தடுத்து நிறுத்துவோம். அதேபோல் இந்திய பெருங்கடல் வழியாக சென்றாலும் அதன் மீது தாக்குதல் நடத்துவோம். போரில் பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடல் வழியாக செல்லும் இஸ்ரேல் சார்ந்த கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதுவரை அவர்கள் 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.