மெக்சிகோவில் வெப்ப அலையால் உயிரிழக்கும் குரங்குகள்

May 22, 2024

மெக்சிகோ நாட்டில் வெப்ப அலை வீசி வருகிறது. அதிக வெப்பநிலையால் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள் மற்றும் தாவரங்களும் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. அந்த வகையில், அதிக எண்ணிக்கையிலான குரங்குகள் இறந்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. மெக்சிகோவில் உள்ள கல்ஃப் கோஸ்ட் பகுதியில் காணப்படும் ஹவுலர் வகையைச் சேர்ந்த குரங்குகள் வெப்பத்தால் உயிரிழந்து வருகின்றன. கிட்டத்தட்ட 83 குரங்குகள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், சில குரங்குகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. வெப்ப காய்ச்சலால் […]

மெக்சிகோ நாட்டில் வெப்ப அலை வீசி வருகிறது. அதிக வெப்பநிலையால் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள் மற்றும் தாவரங்களும் அதிக பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. அந்த வகையில், அதிக எண்ணிக்கையிலான குரங்குகள் இறந்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.

மெக்சிகோவில் உள்ள கல்ஃப் கோஸ்ட் பகுதியில் காணப்படும் ஹவுலர் வகையைச் சேர்ந்த குரங்குகள் வெப்பத்தால் உயிரிழந்து வருகின்றன. கிட்டத்தட்ட 83 குரங்குகள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும், சில குரங்குகள் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. வெப்ப காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குரங்குகளை காப்பாற்ற மருத்துவர்கள் போராடி வருகின்றனர். மெக்சிகோவில் ஏற்பட்டுள்ள வெப்ப அலையால், மார்ச் மாதம் முதல் 25 மனிதர்கள் உயிரிழந்த நிலையில், குரங்குகளும் உயிரிழந்து வருவது கவலை அளிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu