வரும் 2025 ஆம் ஆண்டுக்குள், 4000 முதல் 6000 எண்ணிக்கையில் பணியாளர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக எச் பி நிறுவனம் தெரிவித்துள்ளது. அண்மையில், நிறுவனத்தின் காலாண்டு நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டதை ஒட்டி, இந்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இதன் மூலம், தொழில்நுட்பம் சார்ந்த பல நிறுவனங்களின் பணி நீக்க நடவடிக்கையில் எச் பி நிறுவனமும் இணைந்துள்ளது.
கடந்த காலாண்டில், எச் பி நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் 0.8% குறைந்துள்ளது. மேலும், நிறுவனத்தின் பல்வேறு துறைகளிலும் இழப்புகள் ஏற்பட்டுள்ளன. எனவே, செலவுகளை குறைக்கும் நோக்கில், பணி நீக்கம், டிஜிட்டல் ட்ரான்ஸ்பர்மேஷன் உள்ளிட்ட பல மாறுதல்களை கொண்டு வர உள்ளதாக எச் பி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம், 2025 ஆம் ஆண்டுக்குள், குறைந்த பட்சம் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சேமிக்கப்படும் என தெரிவித்துள்ளது. குறிப்பாக, பணியாளர்களுக்கான செலவு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை சேமிக்கப்படும் என தெரிவித்துள்ளது.