மத்திய கிழக்கு நாடுகளுக்கான தலைமையகத்தை சவுதி அரேபியாவுக்கு மாற்ற சீனாவை சேர்ந்த ஹூவாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தற்போதைய நிலையில், துபாய் மற்றும் பஹ்ரைனில் ஹூவாய் தலைமை அலுவலகங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது, ரியாத் நகருக்கு தலைமையகத்தை மாற்ற நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆனால் இது குறித்து இறுதி கட்ட முடிவு வெளியாகவில்லை.
வரும் 2024 ஆம் ஆண்டு முதல், சவுதி அரேபியாவில் அலுவலகம் இல்லாத வெளிநாட்டு நிறுவனங்கள் சவுதி அரேபிய வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ,சவுதி அரேபியாவில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. அந்த வகையில், சவுதி அரேபியாவில் வர்த்தகத்தை மேற்கொள்வதற்காக, ஹூவாய் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.