சமஸ்கிருதத்திற்கு மட்டுமே மாபெரும் நிதி ஒதுக்கீடு – பிற மொழிகள் புறக்கணிப்பு!

மத்திய அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்ற தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில், மத்திய பா.ஜ.க. அரசு சமஸ்கிருத மொழிக்காக மட்டும் ரூ.2,533.59 கோடி நிதியை ஒதுக்கியது தெரியவந்துள்ளது. இதே காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா போன்றப் பிற இந்திய மொழிகளுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ரூ.147.56 கோடிக்கு மட்டுமே சமமாக உள்ளது. இது சமஸ்கிருதத்திற்கான நிதியை விட 17 மடங்கு குறைவானதாகும். ஆண்டுக்கு சராசரியாக […]

மத்திய அரசு சமஸ்கிருத வளர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்ற தகவல் தற்போது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில், மத்திய பா.ஜ.க. அரசு சமஸ்கிருத மொழிக்காக மட்டும் ரூ.2,533.59 கோடி நிதியை ஒதுக்கியது தெரியவந்துள்ளது. இதே காலகட்டத்தில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா போன்றப் பிற இந்திய மொழிகளுக்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதி ரூ.147.56 கோடிக்கு மட்டுமே சமமாக உள்ளது. இது சமஸ்கிருதத்திற்கான நிதியை விட 17 மடங்கு குறைவானதாகும். ஆண்டுக்கு சராசரியாக ரூ.230 கோடி அளவில் நிதி வழங்கப்பட்ட சமஸ்கிருதத்தை ஒப்பிடுகையில், தமிழுக்கு வழங்கப்பட்ட தொகை 5 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu