பூமியைத் தாக்கிய சூரிய காந்தப்புயல் - ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளில் தகவல் தொடர்பு சேவைகள் பாதிப்பு

November 8, 2022

சூரியனின் மேற்பரப்பில் இருந்து சக்தி வாய்ந்த காந்த அலைகள் கடந்த இரண்டு நாட்களாக வெளிவந்துள்ளன. இது போன்ற காந்த அலைகள், பூமியின் காந்தப் புலத்துடன் மோதி, பெரும் காந்த புயலை ஏற்படுத்துகின்றன. இதனால் பூமியின் காந்தப்புலம் பாதிப்படைவதுடன், தொலை தொடர்பு சேவைகள் பாதிப்படைகின்றன. மிகத் தீவிரமான காந்த புயல் ஏற்பட்டால், மின்சார இணைப்பிலும் பாதிப்புகள் நிகழும். அந்த வகையில், அண்மையில், சூரியனின் மேற்பரப்பில் உள்ள AR3141 என்ற கரும்பகுதியில் வெடிப்பு நேரிட்டுள்ளது. இதனால், நேற்று அதிகாலையில், கதிர்வீச்சுகள் […]

சூரியனின் மேற்பரப்பில் இருந்து சக்தி வாய்ந்த காந்த அலைகள் கடந்த இரண்டு நாட்களாக வெளிவந்துள்ளன. இது போன்ற காந்த அலைகள், பூமியின் காந்தப் புலத்துடன் மோதி, பெரும் காந்த புயலை ஏற்படுத்துகின்றன. இதனால் பூமியின் காந்தப்புலம் பாதிப்படைவதுடன், தொலை தொடர்பு சேவைகள் பாதிப்படைகின்றன. மிகத் தீவிரமான காந்த புயல் ஏற்பட்டால், மின்சார இணைப்பிலும் பாதிப்புகள் நிகழும். அந்த வகையில், அண்மையில், சூரியனின் மேற்பரப்பில் உள்ள AR3141 என்ற கரும்பகுதியில் வெடிப்பு நேரிட்டுள்ளது. இதனால், நேற்று அதிகாலையில், கதிர்வீச்சுகள் நிறைந்த M5 ரக சூரிய கதிர்வீச்சு பூமியை தாக்கி உள்ளது. இதன் விளைவாக, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட தெற்கு பசிபிக் பகுதிகளில் ரேடியோ சிக்னல்கள் பாதிப்படைந்தன. அந்தப் பகுதிகளில், சில மணி நேரத்திற்கு தகவல் தொடர்பு சேவை பாதிக்கப்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu