ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் நான்காம் காலாண்டு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதன்படி, நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர லாபம் 2406 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 6% சரிவாகும். மேலும், நிறுவனத்தின் லாபம் குறித்து கணிக்கப்பட்ட பல்வேறு நிபுணர்களின் முடிவுகளை விட குறைவாக பதிவாகியுள்ளது.
கடந்த மார்ச் மாத இறுதி நிலவரப்படி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 14693 கோடி ஆகும். இதுவே, முந்தைய ஆண்டில் 14638 கோடியாக பதிவானது. அதன்படி, வருவாயில் அதே நிலை நீடித்துள்ளது. மேலும், நிறுவனத்தின் எபிட்டா மதிப்பு 1% வீழ்ச்சி அடைந்து, 3435 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்தின் நிர்வாக குழு, 2024 ஆம் நிதி ஆண்டுக்கு 24 ரூபாயை டிவிடெண்ட் ஆக நிர்ணயிக்க பரிந்துரை செய்துள்ளது.














