ஹிந்துஸ்தான் யூனிலீவர் - உப்பு மற்றும் கோதுமை மாவு விற்பனையிலிருந்து வெளியேறுகிறது

February 20, 2023

இந்தியாவின் முன்னணி எஃப் எம் சி ஜி நிறுவனமாக ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம், ‘அன்னபூர்ணா’ என்ற பெயரில் கோதுமை மாவு வர்த்தகத்தை மேற்கொண்டு வந்தது. மேலும், ‘கேப்டன் குக்’ என்ற பெயரில் உப்பு வணிகத்தில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், இந்த இரு வர்த்தகத்திலிருந்தும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் வெளியேறுவதாக அறிவித்துள்ளது. மற்ற உணவுப் பொருட்கள் வர்த்தகத்தில் அதிக கவனம் செலுத்துவதற்காக இதிலிருந்து வெளியேறுவதாக நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்னபூர்ணா மற்றும் கேப்டன் குக் […]

இந்தியாவின் முன்னணி எஃப் எம் சி ஜி நிறுவனமாக ஹிந்துஸ்தான் யுனிலிவர் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம், ‘அன்னபூர்ணா’ என்ற பெயரில் கோதுமை மாவு வர்த்தகத்தை மேற்கொண்டு வந்தது. மேலும், ‘கேப்டன் குக்’ என்ற பெயரில் உப்பு வணிகத்தில் ஈடுபட்டு வந்தது. இந்நிலையில், இந்த இரு வர்த்தகத்திலிருந்தும் ஹிந்துஸ்தான் யூனிலீவர் வெளியேறுவதாக அறிவித்துள்ளது. மற்ற உணவுப் பொருட்கள் வர்த்தகத்தில் அதிக கவனம் செலுத்துவதற்காக இதிலிருந்து வெளியேறுவதாக நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்னபூர்ணா மற்றும் கேப்டன் குக் பிராண்டுகளை, சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘உமா குளோபல் ஃபுட்’ என்ற நிறுவனத்திடம் ஹிந்துஸ்தான் யூனிலீவர் விற்றுள்ளது. சுமார் 60.4 கோடிக்கு இந்த இரு வர்த்தகங்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2022-ம் நிதி ஆண்டில், அன்னபூர்ணா மற்றும் கேப்டன் குக் பிராண்டுகளின் விற்பனை மதிப்பு 127 கோடியாக பதிவானது. இது ஹிந்துஸ்தான் யூனிலீவரின் மொத்த வர்த்தக மதிப்பில் 1% க்கும் குறைவானதாகும். எனவே, ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம், இவற்றிலிருந்து வெளியேற முடிவெடுத்ததாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu