அதிபா் பைடன் மகன் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டு

December 9, 2023

அமெரிக்க அதிபர் பைடனின் மகன் வரி ஏய்ப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் மீது வரி ஏய்ப்பு வழக்கு குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளது. இதில் ஆறு குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாக கலிபோர்னியா மாகாண சிறப்பு விசாரணை அதிகாரி டேவிட் வைஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தீர்ப்பில், கடந்த 2016 முதல் 2019 ஆம் ஆண்டு வரை ஹன்டர் பைடன் கோடிக்கணக்கான டாலர்களை செலவு செய்துள்ளார். ஆனால் அதற்கான வரிகளை அவர் […]

அமெரிக்க அதிபர் பைடனின் மகன் வரி ஏய்ப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மகன் மீது வரி ஏய்ப்பு வழக்கு குற்றச்சாட்டுகள் வெளிவந்துள்ளது. இதில் ஆறு குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாக கலிபோர்னியா மாகாண சிறப்பு விசாரணை அதிகாரி டேவிட் வைஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள தீர்ப்பில், கடந்த 2016 முதல் 2019 ஆம் ஆண்டு வரை ஹன்டர் பைடன் கோடிக்கணக்கான டாலர்களை செலவு செய்துள்ளார். ஆனால் அதற்கான வரிகளை அவர் செலுத்தவில்லை. இது குறித்து அவர் மீது சுமத்தப்பட்டுள்ள ஆறு குற்றச்சாட்டுகள் ஏற்புடையவை என்று குறிப்பிட்டுள்ளார். இந்த காலகட்டத்தில் ஹன்டர் போதைப் பொருள்களுக்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இவர் மீதான குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு சுமார் 17 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும் என்று கூறப்படுகிறது. அதோடு அமெரிக்காவில் போதை பொருளை பயன்படுத்துபவர்கள் ஆயுதங்கள் வைத்துக் கொள்வதற்கு தடை உள்ளது.

ஹன்டர் பைடன் அந்த தடையை மீறி கடந்த 2018 இல் துப்பாக்கி வைத்திருந்தார் என்று ஏற்கனவே டெலாவர் மாகாணத்தில் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், இவர் மீது வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளும் தற்போதுபோடப்பட்டுள்ளது. இதன் காரணமாக அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட விரும்பும் ஜோ பைடனுக்கு பின்னடைவு ஏற்படும் என்று பரவலாக கருதப்படுகிறது. இதுகுறித்து ஹன்டர் தரப்பு வழக்கறிஞர் அபே லோவல் கூறுகையில், எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் நிர்பந்தத்தினால் சிறப்பு விசாரணை அதிகாரி டேவிட் வைஸ் இப்படிப்பட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார் என்று கூறி உள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu