துப்பாக்கி வழக்கில் ஜோ பைடனின் மகன் குற்றவாளி என தீர்ப்பு

June 12, 2024

சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கிய வழக்கில் அமெரிக்க அதிபரின் மகன் ஹன்டர் பைடன் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமெரிக்க அதிபரின் மூத்த மகன் ஹன்டர் பைடன். கடந்த 2018 ஆம் ஆண்டு இவர் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முதல் இரண்டு வழக்குகளில் தலா 10 ஆண்டுகள், மூன்றாவது வழக்கில் […]

சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கிய வழக்கில் அமெரிக்க அதிபரின் மகன் ஹன்டர் பைடன் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்க அதிபரின் மூத்த மகன் ஹன்டர் பைடன். கடந்த 2018 ஆம் ஆண்டு இவர் சட்டவிரோதமாக துப்பாக்கி வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இவர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முதல் இரண்டு வழக்குகளில் தலா 10 ஆண்டுகள், மூன்றாவது வழக்கில் ஐந்து ஆண்டுகள் என அதிகபட்சம் 25 ஆண்டுகள் வரை ஹன்டர் பைடனுக்கு தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது. தண்டனை குறித்த விவரங்கள் அறிவிக்கப்படவில்லை. அமெரிக்கா சட்டப்படி குற்றவாளி என அறிவிக்கப்பட்டவருக்கு தண்டனை விவரங்கள் 120 நாட்களுக்குள் வழங்கப்படும். வரும் நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்குள் தண்டனை விவரம் அறிவிக்கப்படும். இது குறித்து பேசுகையில் அமெரிக்க அதிபர் பைடன் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார். அதே சமயத்தில் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu