அண்மையில், சூறாவளி தாக்குதலை எதிர்கொண்ட அமெரிக்கா மீண்டும் ஒரு சூறாவளையை எதிர்கொண்டு வருகிறது. இடாலியா என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த சூறாவளி, மூன்றாம் நிலை புயலாக வலுப்பெற உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. இது வடமேற்கு புளோரிடா மாகாணத்தை நோக்கி நகர்ந்து வருவதாக அமெரிக்க வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலையில், சூறாவளியாக இருக்கும் இடாலியா, கரையைக் கடக்கும் போது அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தும் புயலாக வலுப்பெறும் என கூறப்பட்டுள்ளது. இதுவரை அமெரிக்காவில் பதிவான புயல்களிலேயே, இது மிகவும் தீவிரமானதாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. எனவே, பாதிப்புகள் அதிகமாகலாம் என அஞ்சப்படுகிறது. பேரிடர் மீட்பு துறை அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக அனைத்து புயல்களும் மிகவும் வலுவானதாக மாறி வருவதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.