ஹூருன் நிறுவனத்தின் இந்திய பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். இரண்டாம் இடத்தில் அதானி குழும தலைவர் கௌதம் அதானி உள்ளார்.
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு, இந்த ஆண்டு 2% உயர்ந்து, 808700 கோடி ரூபாயாக உள்ளது. அதே சமயத்தில், கவுதம் அதானியின் சொத்து மதிப்பு 57% சரிவடைந்து, 474800 கோடி ரூபாயாக உள்ளது. அதன்படி, கௌதம் அதானியை பின்னுக்குத் தள்ளி, முகேஷ் அம்பானி முதலிடம் பிடித்துள்ளார். மூன்றாவது இடத்தில், பூனாவாலா குடும்பம் உள்ளது. இதன் சொத்து மதிப்பு 36% உயர்ந்து 278500 ஆக உள்ளது. நான்காம் இடத்தில் ஷிவ் நாடார் (228900 கோடி), 5ஆம் இடத்தில் கோபிசந்த் ஹிந்துஜா (176500 கோடி) ஆகியோர் உள்ளனர். சன் பார்மா தலைவர் திலீப் ஷாங்வி, 164300 கோடி சொத்து மதிப்புடன் ஆறாம் இடத்தில் உள்ளார்.