ஹைதராபாத் மெட்ரோ வருவாய் சரிவு - எல் அண்ட் டி வெளியேற முடிவு

May 21, 2024

ஹைதராபாத் மெட்ரோவில் பயணியர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மெட்ரோவின் வருவாய் வீழ்ச்சி அடைந்துள்ளது. எனவே, ஹைதராபாத் மெட்ரோவின் முக்கிய பங்குதாரராக உள்ள எல் அண்ட் டி நிறுவனம் அதிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. ஹைதராபாத் மெட்ரோவின் 90% பங்குகளை எல் அண்ட் டி கொண்டுள்ளது. மீதமுள்ள 10% பங்குகளை தெலுங்கானா மாநில அரசு வைத்துள்ளது. இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் பெண்களுக்கு இலவச பஸ் பாஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதால், மெட்ரோ பயணியர் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. […]

ஹைதராபாத் மெட்ரோவில் பயணியர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் மெட்ரோவின் வருவாய் வீழ்ச்சி அடைந்துள்ளது. எனவே, ஹைதராபாத் மெட்ரோவின் முக்கிய பங்குதாரராக உள்ள எல் அண்ட் டி நிறுவனம் அதிலிருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது.

ஹைதராபாத் மெட்ரோவின் 90% பங்குகளை எல் அண்ட் டி கொண்டுள்ளது. மீதமுள்ள 10% பங்குகளை தெலுங்கானா மாநில அரசு வைத்துள்ளது. இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் பெண்களுக்கு இலவச பஸ் பாஸ் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதால், மெட்ரோ பயணியர் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. விளைவாக, மெட்ரோ வருவாய் வீழ்ச்சி அடைந்தது. கடந்த நவம்பர் மாதத்தில் 5.5 லட்சம் பயணிகள் மெட்ரோவில் பயணித்த நிலையில், தற்போது 4.8 லட்சம் பேர் மட்டுமே பயணித்து வருகின்றனர். எனவே, மெட்ரோ பங்குகளை 2026 ஆம் ஆண்டுக்குப் பின் விற்க உள்ளதாக எல் அண்ட் டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu