ஹைதராபாத் நகரில் போலீஸ் கட்டுப்பாட்டு அலுவலகம் ஹெலிகாப்டர் இறங்கும் வசதியுடன் திறக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் ரூபாய் 500 கோடி செலவில் காவல்துறை புதிய கட்டுப்பாட்டு அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. அதிநவீன வசதிகளுடன் 20 மாடிகள் கொண்ட கட்டிடமாக கட்டப்பட்டுள்ளது. இதில் டிஜிபி அலுவலகம் நான்காவது மாடியிலும் , கமிஷனர் அலுவலகம் 18 வது தளத்திலும் இயங்குகிறது. ஏழாவது மாடியில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் அமெரிக்கப் பென்டகன் நகரில் உள்ள ராணுவ மையம் போல அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இதில் ஹெலிகாப்டர் இறங்கும் வசதியும் மொட்டைமாடியில் செய்யப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் மாநிலம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள கேமராக்களை கண்காணிக்க முடியும். ஒவ்வொரு வாகனங்களையும் தனித்தனியாக கண்காணிக்க முடியும். மேலும் பேரிழப்பு ஏற்பட்டால் அனைத்து செயல்பாடுகளையும் மையமாகக் கொண்டு இந்த அறை அதிநவீன வசதிகளுடன் இயங்கும் வாய்ப்புகளுடன் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. வானிலை நிகழ்வுகளையும் முன்கூட்டியே கணிக்க கூடிய முன்னறிவிப்பு மையம் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது மாநிலத்திற்கு மிகப்பெரிய அரணாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.