மிக்ஜாம் புயல் பாதிப்பிற்கு ரூபாய் 3 கோடி பொது நிவாரண நிதியை ஹூண்டாய் நிறுவனம் வழங்கியுள்ளது.
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் பல இடங்களில் நீர் வழியாததை தொடர்ந்து வெள்ள பாதிப்பிற்காக சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பலர் நிவாரணத் தொகை வழங்கி வருகின்றனர். தற்போது இதில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஹூண்டாய் நிறுவனமும் மூன்று கோடி ரூபாய் வெள்ள நிவாரணம் வழங்கியுள்ளது.