ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் வாகனம் வெளியிடப்பட்டுள்ளது.
வரும் ஜனவரி 16 ஆம் தேதி, ஹூண்டாய் நிறுவனத்தின் நடுத்தர வகை எஸ்யூவி வாகனம் - ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் வெளியாக உள்ளது. இதன் புகைப்படங்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. மேலும், 25000 ரூபாய் செலுத்தி இந்த வாகனங்களை முன் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்த வரை, எஸ்யூவி வாகனங்களில் ஹூண்டாய் கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில், பல்வேறு புதிய அம்சங்களுடன், மேம்படுத்தப்பட்ட கிரெட்டா ஃபேஸ்லிஃப்ட் வாகனம் வெளியாக உள்ளது. இது கியா செல்டாஸ், மாருதி சுசுகி கிரான்ட் விட்டாரா, டாடா கர்வ் ஆகிய வாகனங்களுக்கு போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த காரின் விலை 11 லட்சம் முதல் 20 லட்சம் வரை இருக்கும் என கருதப்படுகிறது.