வெர்னா காரின் புதிய மாடல் - ஹூண்டாய் அறிமுகம்

March 21, 2023

ஹூண்டாய் நிறுவனம் இன்று தனது புதிய வெர்னா மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை 10.89 லட்சம் முதல் 17.37 லட்சம் வரை சொல்லப்பட்டுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் வெர்னா வாகனங்கள், ஹோண்டா சிட்டி, ஸ்கோடா சிலேவியா, வோல்ஸ்வேகன் விர்டஸ், மாருதி சுசுகி சியாஸ் ஆகிய வாகனங்களுக்கு போட்டியாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஆறாம் தலைமுறை வெர்னா கார், மேம்படுத்தப்பட்ட மைலேஜ் உடன் வெளிவந்துள்ளது. […]

ஹூண்டாய் நிறுவனம் இன்று தனது புதிய வெர்னா மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை 10.89 லட்சம் முதல் 17.37 லட்சம் வரை சொல்லப்பட்டுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹூண்டாய் நிறுவனத்தின் வெர்னா வாகனங்கள், ஹோண்டா சிட்டி, ஸ்கோடா சிலேவியா, வோல்ஸ்வேகன் விர்டஸ், மாருதி சுசுகி சியாஸ் ஆகிய வாகனங்களுக்கு போட்டியாக சொல்லப்படுகிறது. அந்த வகையில், புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஆறாம் தலைமுறை வெர்னா கார், மேம்படுத்தப்பட்ட மைலேஜ் உடன் வெளிவந்துள்ளது. ஒரு லிட்டருக்கு 18.6 முதல் 20.6 கிலோமீட்டர் வரை இந்த வாகனம் மைலேஜ் கொடுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும், இந்த வாகனத்தில், பாதுகாப்பு அம்சங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் அறிமுகம் மூலம், ஹூண்டாய் நிறுவனத்தின் செடான் வகை வாகனங்கள் விற்பனை உயரும் என்று கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu