ஹூண்டாய் ஐயோனிக் 5 மின்சார வாகனம் - இந்தியச் சந்தையில் அறிமுகம்

December 21, 2022

ஹூண்டாய் நிறுவனத்தின் மின்சார வாகனமான ஐயோனிக் 5, இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. ஒரு லட்ச ரூபாய் முன்பணம் செலுத்தி, இந்த வாகனத்தை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வாகனத்தின் விலை குறித்த முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை. அடுத்த மாதம் நொய்டாவில் நடைபெறும் வாகனக் காட்சி நிகழ்வில், இதன் விலை மற்றும் பிற அம்சங்கள் வெளியிடப்படும் என கூறப்படுகிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் ஐயோனிக் 5 மின்சார வாகனம், உலக நாடுகள் பலவற்றில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, […]

ஹூண்டாய் நிறுவனத்தின் மின்சார வாகனமான ஐயோனிக் 5, இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. ஒரு லட்ச ரூபாய் முன்பணம் செலுத்தி, இந்த வாகனத்தை பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த வாகனத்தின் விலை குறித்த முழு விவரங்கள் வெளியிடப்படவில்லை. அடுத்த மாதம் நொய்டாவில் நடைபெறும் வாகனக் காட்சி நிகழ்வில், இதன் விலை மற்றும் பிற அம்சங்கள் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

ஹூண்டாய் நிறுவனத்தின் ஐயோனிக் 5 மின்சார வாகனம், உலக நாடுகள் பலவற்றில் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது, இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 58KWh பேட்டரி திறன் கொண்ட ஐயோனிக் 5 வாகனம், 385 கிலோ மீட்டரும், 72.6KWh பேட்டரி திறன் கொண்ட ஐயோனிக் 5 வாகனம், 480 கிலோ மீட்டரும் கொடுக்கும் என கூறப்படுகிறது. அத்துடன், எச்டி தொடுதிரை, சூரிய கூரை உள்ளிட்ட நவீன அம்சங்கள் இந்த வாகனத்தில் இடம் பெற்றுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu