இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓ - ஹூண்டாய் ஐபிஓ தொடங்கியது

October 15, 2024

இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓவான ஹூண்டாய் ஐபிஓ தொடங்கியுள்ளது. இதன் மூலம், ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் ரூ.27,870 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. முதல் நாளான இன்று, ஐபிஓவுக்கு கணிசமான வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, சில்லறை முதலீட்டாளர்களிடையே இந்த ஐபிஓ மீதான ஆர்வம் அதிகமாக உள்ளது. ஐபிஓ தொடங்கிய 2 மணி நேரத்திற்குள், மொத்த பங்குகளில் 10% பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சில்லறை முதலீட்டாளர்கள் 17% பங்குகளை வாங்கியுள்ளனர். ஊழியர்கள் 46% பங்குகளை வாங்கியுள்ளனர். இருப்பினும், பெரிய நிறுவன […]

இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓவான ஹூண்டாய் ஐபிஓ தொடங்கியுள்ளது. இதன் மூலம், ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம் ரூ.27,870 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. முதல் நாளான இன்று, ஐபிஓவுக்கு கணிசமான வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, சில்லறை முதலீட்டாளர்களிடையே இந்த ஐபிஓ மீதான ஆர்வம் அதிகமாக உள்ளது.

ஐபிஓ தொடங்கிய 2 மணி நேரத்திற்குள், மொத்த பங்குகளில் 10% பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. சில்லறை முதலீட்டாளர்கள் 17% பங்குகளை வாங்கியுள்ளனர். ஊழியர்கள் 46% பங்குகளை வாங்கியுள்ளனர். இருப்பினும், பெரிய நிறுவன முதலீட்டாளர்கள் இன்னும் அதிகளவில் பங்கேற்கவில்லை. இந்த ஐபிஓ அக்டோபர் 17 ஆம் தேதி வரை நீடிக்கும். இதற்கு முன்பாகவே, ஹூண்டாய் நிறுவனம் 225 பெரிய முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.8,315.3 கோடி நிதியை திரட்டி விட்டது நினைவு கூறத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu