வாகன கண்காட்சி 2023 - ஹூண்டாய் நிறுவனத்தின் ஐயானிக் 5 மின்சார வாகனம் வெளியீடு

January 12, 2023

இந்தியாவில் நடைபெற்று வரும் வாகன கண்காட்சி 2023 ல், ஹூண்டாய் நிறுவனம் தனது எஸ்யூவி ரக ஐயானிக் 5 மின்சார வாகனத்தை வெளியிட்டுள்ளது. இதன் விலை 44.95 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த அறிமுகச் சலுகை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் ஐயானிக் 5 மின்சார காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 631 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 72.6 kwh திறன் வாய்ந்த […]

இந்தியாவில் நடைபெற்று வரும் வாகன கண்காட்சி 2023 ல், ஹூண்டாய் நிறுவனம் தனது எஸ்யூவி ரக ஐயானிக் 5 மின்சார வாகனத்தை வெளியிட்டுள்ளது. இதன் விலை 44.95 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், முதல் 500 வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த அறிமுகச் சலுகை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹூண்டாய் நிறுவனத்தின் ஐயானிக் 5 மின்சார காரை ஒருமுறை சார்ஜ் செய்தால் 631 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காரில் 72.6 kwh திறன் வாய்ந்த பேட்டரி பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும், கிராவிட்டி கோல்ட் மேட், ஆப்டிக் வைட், மிட்நைட் பிளாக் பேர்ல் ஆகிய மூன்று வண்ணங்களில் இந்த வாகனம் வெளியிடப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த வாகனம் முழுமையாகவே பசுமை பொருட்கள் கொண்டு உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது, பயோ பெயிண்ட், பசுமை முறையில் தயாரிக்கப்பட்ட லெதர் மற்றும் 100% புதுப்பிக்கத்தக்க இதர பாகங்கள் ஆகியவை கொண்டு தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, வாகனத்தில் 6 ஏர்பேக்குகள் மற்றும் மின்சார பார்க்கிங் பிரேக் வசதிகள் பொருத்தப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu