ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் தனது ரூ.3000 கோடி மதிப்புள்ள பொதுப் பங்கு வெளியீட்டுக்கு செபியிடம் இருந்து ஒப்புதல் பெற்றுள்ளது. இது 2022 ஆம் ஆண்டு எல் ஐ சி யின் ரூ.2700 கோடி ஐபிஓவை விஞ்சி இந்தியாவின் மிகப்பெரிய ஐபிஓவாக அமையும்.
இந்தியாவின் மிகப்பெரிய வாகன ஏற்றுமதியாளரான ஹூண்டாய், தனது பிராண்ட் விழிப்புணர்வை அதிகரிக்கவும், பங்குச் சந்தை புழக்கத்தை மேம்படுத்தவும் ஐபிஓ வெளியிடுகிறது. சிட்டி, எச்எஸ்பிசி, ஜேபி மோர்கன், கோடக் மஹிந்திரா மற்றும் மோர்கன் ஸ்டான்லி போன்ற பன்னாட்டு நிதி நிறுவனங்கள் ஐபிஓவுக்கான ஆலோசகர்களாக உள்ளனர். 1998 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் கால் பதித்த ஹூண்டாய், இதுவரை 12 மில்லியன் வாகனங்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விற்பனை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.














