5 நிமிடத்திற்கு ஒரு ஹூண்டாய் க்ரெட்டா விற்பனை - புதிய சாதனை

February 20, 2024

ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா வாகனம், விற்பனையில் புதிய சாதனையை படைத்துள்ளது. அதாவது, ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு ஹூண்டாய் க்ரெட்டா வாகனம் விற்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்தியாவில் இதுவரை ஒரு மில்லியன் ஹூண்டாய் க்ரெட்டா வாகனங்கள் விற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2.8 லட்சம் ஹூண்டாய் க்ரெட்டா வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக ஹூண்டாய் க்ரெட்டா வாகனத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் கார் மாடல்களில் […]

ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரெட்டா வாகனம், விற்பனையில் புதிய சாதனையை படைத்துள்ளது. அதாவது, ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் ஒரு ஹூண்டாய் க்ரெட்டா வாகனம் விற்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இந்தியாவில் இதுவரை ஒரு மில்லியன் ஹூண்டாய் க்ரெட்டா வாகனங்கள் விற்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2.8 லட்சம் ஹூண்டாய் க்ரெட்டா வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 8 ஆண்டுகளாக ஹூண்டாய் க்ரெட்டா வாகனத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. ஹூண்டாய் நிறுவனத்தின் கார் மாடல்களில் அதிக விற்பனை பதிவாகும் மாடலாக இது உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் மட்டுமே ஒரு மில்லியன் வாகனங்கள் விற்கப்பட்டு புதிய சாதனை எட்டப்பட்டுள்ளது. புதிதாக, நவீன வசதிகளுடன் அறிமுகமாகியுள்ள ஹூண்டாய் க்ரெட்டா வாகனத்திற்கும் இந்தியாவில் அதிக வரவேற்பு கிடைத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu