இங்கிலாந்தின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக் டவுனிங்ஸ்டிரீட்டில் நடந்த தீபாவளி வரவேற்பில் கலந்து கொண்டார். அப்போது பிரிட்டனுக்கு நம்பிக்கையான எதிர்காலத்தை வழங்குவதாகவும், நாட்டின் வளர்ச்சிக்காக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வதாகவும் உறுதியளித்தார்.
பக்கிங்ஹாம் அரண்மனையில் மூன்றாம் சார்லஸை சந்தித்த பிறகு ரிஷிசுனக் அதிகாரப்பூர்வமாக இங்கிலாந்து பிரதமரானார். அதையடுத்து பிரதமர் அலுவலகத்தில் உரையாற்றிய அவர், இங்கிலாந்து "ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியை" எதிர்கொள்கிறது என்று ௯றினார். பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில் பிரிட்டன் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ளதாகவும் விரைவில் பிரச்சனைகளை தான் சரிசெய்வதாகவும் உறுதியளித்தார்.
இது குறித்து டுவிட்டரில் பதிவிட்ட ரிஷிசுனக், தனது இல்லத்தில் தீபத் திருவிழாவைக் கொண்டாடும் படத்தைப் பகிர்ந்து கொண்டார். மேலும் அப்பதிவில் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். சுனக் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, இந்த நிகழ்வு இந்தியர்களிடையே பெருமித உணர்வை ஏற்படுத்தி உள்ளது . இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பதிவில் ரிஷிசுனக்குக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தார். அத்துடன் அவரை இங்கிலாந்தில் வாழும் இந்தியர்களின் "வாழும் பாலம்" என்றும் புகழ்ந்துள்ளார்.
அவர் முதன்முதலில் 2015 இல் எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் போரிஸ் ஜான்சன் தனது அரசாங்கத்தில் சுனக்கை க௫வூல தலைமைச் செயலகராக நியமித்தார். அதைத் தொடர்ந்து சுனக்கிற்கு 2020ல் சான்செலராக பதவி உயர்வு அளித்தார். முன்னதாக இங்கிலாந்தின் பணநெருக்கடியை சமாளிக்க லிஸ்டிரஸின் கடன் வாங்கும் திட்டம் நாட்டின் பொருளாதாரத்தை குழப்பத்தில் ஆழ்த்தும் என கூறி, நிதிப் பிரச்சனைகளை கணித்த முதல் நபர் ரிஷி சுனக் என்பது குறிப்பிடத்தக்கது.














