ஐபிஎம் நிறுவனம், கடந்த வருட வருவாய் இலக்கை எட்ட தவறி உள்ளது. மேலும், குறிப்பிட்ட சில முதலீடுகளில் இருந்து வெளியேற உள்ளது. எனவே, அதன் பகுதியாக, 3900 பேரை பணி நீக்கம் செய்ய உள்ளதாக நேற்று அறிவித்துள்ளது. இது ஐபிஎம் நிறுவனத்தின் மொத்த பணியாளர் எண்ணிக்கையில் 1.5% என்பது குறிப்பிடத்தக்கது. பணி நீக்கம் அறிவிக்கப்பட்டாலும் தொடர்ந்து புதிய பணி அமர்வுகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒட்டுமொத்தமாக 2022 ம் ஆண்டின் வருவாய் வளர்ச்சி 5.5% ஆக பதிவாகியுள்ளது. இது, கடந்த 10 ஆண்டுகளில் நிறுவனத்தின் உச்சபட்ச வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் மாத இறுதியில், ஐபிஎம் நிறுவனத்தின் வருவாய் 16.69 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாகியுள்ளது. மேலும், 2022 ஆம் ஆண்டின் பணப்புழக்கம் 9.3 பில்லியன் அமெரிக்க டாலர்களாக பதிவாக்கியுள்ளது. இது 10 பில்லியன் டாலர் வரை எட்டும் என்று கணிக்கப்பட்டிருந்த நிலையில், குறைவாக பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன், ஐபிஎம் நிறுவனத்தின் வருடாந்திர வருவாய் வளர்ச்சியும் கடந்த ஆண்டை விட குறைவாக பதிவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.














