ஐபிஎம் நிறுவனம் சீனாவில் உள்ள ஒரு முக்கிய ஆராய்ச்சிப் பிரிவை மூட உள்ளது. இந்த நடவடிக்கையால் சுமார் 1000 ஊழியர்கள் பாதிக்கப்பட உள்ளனர்.
சீனாவில் பொருளாதார சவால்கள் மற்றும் ஒழுங்குமுறை ஆய்வுகள் அதிகரித்து வரும் நிலையில், பல வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை குறைத்து வருகின்றன. அந்த வகையில் ஐபிஎம் நிறுவனமும் இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறது. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தியின்படி, ஐபிஎம் தனது சீன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செயல்பாடுகளை இந்தியாவின் பெங்களூரு உட்பட பிற இடங்களுக்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. இதன் மூலம், பெருமளவிலான செலவுகள் குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது.