வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் 29ஆம் தேதி வரை ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் நடைபெற உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் ஒன்றாம் தேதி முதல் 29ம் தேதி வரை ஐசிசி டி20 உலக கோப்பைத் தொடர் நடைபெறுகிறது. இந்த உலகக் கோப்பை போட்டிகளுக்கான இந்திய அணி தேர்வு செய்வதற்கான கூட்டம் வரும் 27ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. அதில் விராத் ஹோலி, சூரியகுமார் யாதவ், ரவிந்திர ஜடேஜா உள்ளிட்டவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஹர்திக் பாண்டியா தேர்வு செய்யப்படுவாரா என்பது குறித்து கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் டி20 உலக கோப்பைக்கான பிரமோ இன்று வெளியிடப்பட்டுள்ளது.