மாதம் 2 'வந்தே பாரத்' ரயில்கள் தயாரிக்க ஐ.சி.எப். தீவிரம்

January 18, 2023

மாதம் 2 'வந்தே பாரத்' ரயில்கள் தயாரிக்க ஐ.சி.எப்., திட்டமிட்டுள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், வந்தே பாரத் ரயிலுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் நாடு முழுதும் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. அதன்படி, வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணிகளை ஐ.சி.எப்., மட்டுமல்லாமல் இதர ஆலைகளிலும் துவங்க உள்ளது. சென்னை ஐ.சி.எப்., இதுவரையில் மாதம் ஒரு வந்தே […]

மாதம் 2 'வந்தே பாரத்' ரயில்கள் தயாரிக்க ஐ.சி.எப்., திட்டமிட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், வந்தே பாரத் ரயிலுக்கான வரவேற்பு அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் நாடு முழுதும் 75 வந்தே பாரத் ரயில்களை இயக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. அதன்படி, வந்தே பாரத் ரயில் தயாரிப்பு பணிகளை ஐ.சி.எப்., மட்டுமல்லாமல் இதர ஆலைகளிலும் துவங்க உள்ளது.

சென்னை ஐ.சி.எப்., இதுவரையில் மாதம் ஒரு வந்தே பாரத் ரயிலை மட்டுமே தயாரித்து வந்த நிலையில், கடந்த டிசம்பரில் முதல் முறையாக இரண்டு வந்தே பாரத் ரயில்களை தயாரித்து ஒப்படைத்துள்ளோம். அதுபோல், இனி மாதந்தோறும் இரண்டு அல்லது மூன்று வந்தே பாரத் ரயில்களை தயாரித்து வழங்குவதற்கான பணிகளை வேகப்படுத்தியுள்ளோம் என்று தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu