ஐசிஐசிஐ நிகர லாபம் 30% உயர்வு

April 24, 2023

ஐசிஐசிஐ வங்கி, தனிப்பட்ட முறையில், 9121.87 கோடி ரூபாய் நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டு லாபம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, வருடாந்திர அடிப்படையில் 30% உயர்வாகும். அதே வேளையில், வங்கியின் தனிப்பட்ட வருவாய் 36108.88 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வருடாந்திர அடிப்படையில் 32% உயர்வாகும். மேலும், நிறுவனம் வெளியிட்ட நிதிநிலை அறிக்கையின் படி, வங்கியின் பங்கு ஒன்றுக்கு 8 ரூபாயாக டிவிடெண்ட் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வங்கி […]

ஐசிஐசிஐ வங்கி, தனிப்பட்ட முறையில், 9121.87 கோடி ரூபாய் நிகர லாபத்தை பதிவு செய்துள்ளது. இது கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டு லாபம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது, வருடாந்திர அடிப்படையில் 30% உயர்வாகும். அதே வேளையில், வங்கியின் தனிப்பட்ட வருவாய் 36108.88 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இது வருடாந்திர அடிப்படையில் 32% உயர்வாகும். மேலும், நிறுவனம் வெளியிட்ட நிதிநிலை அறிக்கையின் படி, வங்கியின் பங்கு ஒன்றுக்கு 8 ரூபாயாக டிவிடெண்ட் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

வங்கி செயல்பாடுகள் மூலம் கிடைக்கும் லாபம் 28.1% உயர்ந்து, 49139 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வரிக்குப் பின்னான லாபம் 36.7% உயர்ந்து, 31896 கோடியாக பதிவாகியுள்ளது. மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, வங்கியில் உள்ள மொத்த வைப்புத்தொகை 10.9% உயர்ந்து, 1180841 கோடி அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், வங்கிக்கு வட்டி மூலமாக கிடைக்கும் வருவாய் 40.2% உயர்ந்து, 17667 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu