சமீபத்தில் அதிகரிக்கப்பட்ட மினிமம் பேலன்ஸை ஐசிஐசிஐ வங்கி குறைத்துள்ளது. நகர்ப்புறம், கிராமப்புறம் என புதிய விகிதங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி, வாடிக்கையாளர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு மினிமம் பேலன்ஸ் விதிகளில் மாற்றம் செய்துள்ளது. முன்பு நகர்ப்புற கிளைகளில் புதிய கணக்குகளுக்கு ரூ.50,000 என நிர்ணயிக்கப்பட்ட மினிமம் பேலன்ஸ் தற்போது ரூ.15,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், செமி-அர்பன் மற்றும் கிராமப்புற பகுதிகளில் 25,000 ரூபாயிலிருந்து 7,500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பழைய வாடிக்கையாளர்களுக்கான மினிமம் பேலன்ஸ் ரூ.5,000 என்ற நிலைமையே தொடர்கிறது. பெரும்பாலான வங்கிகள் 2,000 ரூபாயிலிருந்து 10,000 ரூபாய் வரை மினிமம் பேலன்ஸ் விதிகளை கடைபிடித்து வருகின்றன. இந்த முடிவு வாடிக்கையாளர்களுக்கு பெரும் நிம்மதியையும் வரவேற்பையும் ஏற்படுத்தியுள்ளது.