ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லைஃப், கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் 33% லாப உயர்வை பதிவு செய்துள்ளது. ஜூன் மாத நிறைவில் நிறுவனத்தின் நிகர லாபம் 207 கோடியாக உயர்ந்துள்ளது.
ஐசிஐசிஐ புரூடென்ஷியல் நிறுவனத்திற்கு, பிரீமியம் தொகை மூலமாக கிடைக்கப்பெறும் வருவாய், வருடாந்திர அடிப்படையில் 2% உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாத இறுதியில், நிறுவனத்தின் பிரிமியம் வருவாய் 7020 கோடியாக பதிவாகியுள்ளது. அதே வேளையில், எதிர்கால லாபத்தை குறிக்கும் புதிய வர்த்தக லாபம் 7% குறைந்து, 438 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த காப்பீட்டு நிறுவனத்தின் 13 வது மாத பர்சிஸ்டென்சி 86.4% ஆக மேம்பட்டுள்ளது. சால்வன்சி ரேஷியோ 203.4% ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.