ஐ சி ஐ சி ஐ குழுமத்தை சேர்ந்த ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிறுவனம், தனது காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
கடந்த ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், ஐ சி ஐ சி ஐ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 41% உயர்ந்து, 424 கோடி அளவில் பதிவாகியுள்ளது. மேலும், நிறுவனத்தின் மொத்த வருவாய் 44% உயர்ந்து, 1249 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் வளர்ச்சி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் நிர்வாக இயக்குனர் விஜய் சந்தோக், கடன் வழங்கல் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் துறைகளில் அதிக கவனத்துடன் பணியாற்ற உள்ளதாக கூறினார்.