அரசு ஊழியர்கள் அலுவலக நேரத்தில் அடையாள அட்டை அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசு, அரசு ஊழியர்கள் கட்டாயமாக அடையாள அட்டை அணிய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதன்படி அலுவலக நேரத்தில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை ஊழியர்கள் அணிய வேண்டும் என, மனித வள மேலாண்மைத் துறை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இதனை கடைபிடிக்காத ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.