காசாவில் 10 கி.மீ. நீளமுள்ள ஹமாஸ் சுரங்கப்பாதை அழிப்பு

February 27, 2024

காசாவில் 10 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை ஒன்றை அழித்து விட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், காசா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் நீளத்திற்கு ஒரு பெரிய சுரங்கப்பாதையை இஸ்ரேல் ராணுவம் கண்டறிந்தது. இது காசா வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்க கூடிய வகையில் பூமிக்கு அடியில் செயல்பட்டு வந்தது. சுரங்கத்தின் நுழைவு வாயில் பகுதிகளை இஸ்ரேல் ராணுவத்தினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் […]

காசாவில் 10 கிலோமீட்டர் நீளமுள்ள சுரங்கப்பாதை ஒன்றை அழித்து விட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், காசா மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகத்திற்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் நீளத்திற்கு ஒரு பெரிய சுரங்கப்பாதையை இஸ்ரேல் ராணுவம் கண்டறிந்தது. இது காசா வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளை இணைக்க கூடிய வகையில் பூமிக்கு அடியில் செயல்பட்டு வந்தது. சுரங்கத்தின் நுழைவு வாயில் பகுதிகளை இஸ்ரேல் ராணுவத்தினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இதன் பின்பு அதனை ஆய்வு செய்து இந்த நெட்வொர்க்கின் பெரும் பகுதியை அழித்தனர்.

காசாவை சுற்றியுள்ள பகுதிகளில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட இந்த சுரங்கப்பாதை பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இதற்காக கோடி கணக்கில் நிதி செலவிடப்பட்டு உள்ளது. இதேபோல் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் குடியிருப்புகள் போன்றவற்றின் கீழே சுரங்க நெட்வொர்க் செயல்பட்டு வந்துள்ளது. இதனை இஸ்ரேல் ராணுவத்தினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக கூறியுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu