நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டினால் இனி வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வாகனங்களில் ஊடகம், போலீஸ் என பல்வேறு துறைகளைச் சார்ந்த ஸ்டிக்கர்களை ஒட்டி குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தனியார் வாகனங்களில் அரசால் அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை ஒட்டக்கூடாது. அவ்வாறு ஒட்டி இருப்பவர்கள் மே ஒன்றாம் தேதிக்குள் அதனை அகற்ற வேண்டும். அப்படி அகற்றாமல் விதிமீறலில் ஈடுபட்டு வந்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். மேலும் அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில் வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டி இருந்தால் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது














