கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இக்னேசியஸ் டெலோஸ் புளோரா என்பவர் இந்திய ராணுவத்தில் செவிலியர் சேவையில் முதல் பெண் மேஜர் ஜெனரலாக தமிழகத்தில் இருந்து பதவி உயர்வு பெற்றுள்ளார்.
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இக்னேசியஸ் டெலோஸ் புளோரா தனது மூத்த சகோதரர்களின் அறிவுரைப்படி,பள்ளி படிப்பை முடித்தவுடன் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்திய ராணுவ செவிலியர் சேவை பிரிவு பணிக்கான தேர்வு எழுதினார் அடுத்தடுத்த தேர்வுகளை எழுதிய அவர் பதவி உயர்வும் பெற்று வந்தார். இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரல் எனும் செவிலியர் உயர்ந்த பிரிவில் பதவி உயர்வு பெற்றுள்ளார். இக்னேஷியஸ் டெலோஸ் ப்ளோராவிற்கு 3 சகோதரர்கள் மற்றும் 2 சகோதரிகள் இதில் மூத்த சகோதரர் இந்திய விமானப்படையிலும், இரண்டாவது சகோதரர் எல்லை பாதுகாப்பு படையிலும், மூன்றாவது சகோதரர் இராணுவத்திலும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளனர்.
தற்போது இக்னேசியஸ் டெலோஸ் புளோரா பதவி உயர்வு அடைந்ததை பற்றி அவரது சகோதரர்கள் தமிழகத்தில் முதல் பெண் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றிருப்பதை நினைத்து மிகவும் பெருமையாக உள்ளது எனவும்,நாட்டிற்கும் நாட்டு மக்களுக்கும் சேவை செய்யும் பாக்கியம் எங்களது குடும்ப உறுப்பினர்களுக்கு கிடைத்தது மிகவும் சந்தோஷமாக உள்ளது எனவும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். மேலும் இவரது கணவர் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆவார். இவருக்கு மைக்கேல் ஜெகன், ஜெசன் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர்.