மின்சாரத்தில் இயங்கும் முதல் பந்தய காரை சென்னை ஐஐடி மாணவர்கள் அறிமுகம் செய்துள்ளனர்.
சென்னை ஐஐடியின் பல்வேறு துறைகளை சேர்ந்த 45 மாணவர்களை கொண்ட ரஃப்தார் குழுவினர் கடந்த ஓராண்டாக மேற்கொண்ட செயல்முறையின் விளைவாக இந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னை ஐஐடியின் போட்டிக் குழுக்களில் ஒன்றான ரஃப்தார் குழு, தொழில் துறை தரத்தை மேம்படுத்தவும், பொறியியல் மாணவர்களிடம் உலகத்தர தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வளர்க்கவும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
உலகம் முழுவதிலும் இருந்து மாணவர்கள் பங்கேற்கும் ‘ஃபார்முலா ஸ்டூடன்ட் ஜெர்மனி’ என்ற பிரபல கார் பந்தயப் போட்டி 2023 ஆகஸ்டில் நடக்க உள்ளது. அந்த போட்டிக்கு இந்த காரை கொண்டு செல்ல மாணவர்கள் குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.














