மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் மற்றும் சர்பேஸ் பிரிவுகளின் புதிய தலைவராக பவன் டவுலூரி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை ஐஐடி பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.
பனோஸ் பனாய் மைக்ரோசாப்ட் நிறுவனத்தை விட்டு வெளியேறிய பிறகு விண்டோஸ் மற்றும் சர்பேஸ் ஆகியவை 2 வெவ்வேறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. வெவ்வேறு நபர்கள் இதனை வழிநடத்தி வந்தனர். அதில், சர்பேஸ் குழுவை அவன் பவன் டவுலூரி வழி நடத்தி வந்தார். தற்போது, விண்டோஸ் மற்றும் சர்பேஸ் குழுக்கள் மீண்டும் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. புதிய தலைவராக பவன் டவுலூரி நியமிக்கப்பட்டுள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு முன்னெடுப்புகள் அதிகரித்து வரும் சூழலில், இவரது நியமனம் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.