2023 ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1% - சர்வதேச நாணய நிதியம்

July 26, 2023

நடப்பு 2023 ஆம் ஆண்டில், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.1% அளவில் இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் நேற்று அறிவித்துள்ளது. முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் கணிக்கப்பட்ட வளர்ச்சி விகிதத்தை விட, 0.2% உயர்த்தி நேற்றைய அறிவிப்பு வெளிவந்துள்ளது. கடந்த காலாண்டில் பதிவான அதிக தொழில் வளர்ச்சி, உள்நாட்டு முதலீடுகள் அதிகரிப்பு போன்றவை காரணமாக, வளர்ச்சி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2023 மற்றும் […]

நடப்பு 2023 ஆம் ஆண்டில், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.1% அளவில் இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் நேற்று அறிவித்துள்ளது. முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் கணிக்கப்பட்ட வளர்ச்சி விகிதத்தை விட, 0.2% உயர்த்தி நேற்றைய அறிவிப்பு வெளிவந்துள்ளது. கடந்த காலாண்டில் பதிவான அதிக தொழில் வளர்ச்சி, உள்நாட்டு முதலீடுகள் அதிகரிப்பு போன்றவை காரணமாக, வளர்ச்சி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில், உலகளாவிய வளர்ச்சி விகிதம் 3% அளவில் இருக்கும். இதுவே, 2022 ஆம் ஆண்டில் 3.5% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், 2023ல், உலகளாவிய பணவீக்கம் 8.7% ல் இருந்து 6.8% ஆக சரியும் என தெரிவித்துள்ளது. இது, 2024 ஆம் ஆண்டில், 5.2% ஆக மேலும் சரியும் என கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu