2024 ல் இந்தியாவின் வளர்ச்சி 6.8% - சர்வதேச நாணய நிதியம் கணிப்பு

April 17, 2024

நடப்பாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.8% அளவில் இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. முன்னதாக, 6.5% ஆக கணிக்கப்பட்ட அளவை உயர்த்தி அறிவித்துள்ளது. தொடர்ந்து, உலக அளவில் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, சீன பொருளாதாரத்தை விட இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருவதாக கூறியுள்ளது. நிகழாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 4.6% அளவில் இருக்கும் என்று கணித்துள்ளது. நிகழும் 2024 ஆம் ஆண்டில், உலக அளவில் 3.1% வளர்ச்சி […]

நடப்பாண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 6.8% அளவில் இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. முன்னதாக, 6.5% ஆக கணிக்கப்பட்ட அளவை உயர்த்தி அறிவித்துள்ளது. தொடர்ந்து, உலக அளவில் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. குறிப்பாக, சீன பொருளாதாரத்தை விட இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருவதாக கூறியுள்ளது. நிகழாண்டில் சீனாவின் பொருளாதார வளர்ச்சி 4.6% அளவில் இருக்கும் என்று கணித்துள்ளது.

நிகழும் 2024 ஆம் ஆண்டில், உலக அளவில் 3.1% வளர்ச்சி பதிவாகலாம் என சர்வதேச நாணய நிதியம் கணித்திருந்தது. இதனை தற்போது 3.2% ஆக உயர்த்தி அறிவித்துள்ளது. நிகழாண்டில் அமெரிக்காவின் வளர்ச்சி விகிதம் 2.7% ஆக இருக்கும் என தெரிவித்துள்ளது. இது 2.1% ஆக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆசியாவை பொறுத்தவரை, வளர்ச்சி விகிதம் 5.6% ல் இருந்து 5.2% ஆக சரியும் என தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu