கடந்த மாதத்திற்கான பொருளாதார வளர்ச்சி கணிப்பை விட உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம், கடந்த மாதம், 2023 ஆம் ஆண்டிற்கான உலகப் பொருளாதார வளர்ச்சி கணிப்பை 2.9 சதவீதத்திலிருந்து 2.7 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது. மேலும், இந்தோனேஷியாவில் நடைபெறும் ஜி-20 மாநாட்டிற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில், எதிர்பார்த்ததை விட உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதாக பதிவிட்டுள்ளது. அத்துடன், பொருளாதார வீழ்ச்சி தொடரும் நிலை உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், உலகளவில், பொருளாதார நிலை, எப்போதும் இல்லாத வகையில், அதிக மாற்றங்களை உள்ளடக்கியதாக அமைந்துள்ளது என்று கூறியுள்ளது. மேலும், “ஐரோப்பாவில் நிலவும் எரிசக்தி நெருக்கடி உலகளாவிய முறையில் வணிகத்தை பாதித்துள்ளது. இதனால், பல நாடுகளில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக, வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. உக்ரைன் - ரஷ்யா போரும் இதற்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது” என்று தெரிவித்துள்ளது.