பாகிஸ்தானுக்கு மேலும் 700 மில்லியன் டாலர்கள் நிதியுதவி

January 2, 2024

பாகிஸ்தானுக்கு 700 மில்லியன் டாலர்கள் நிதி உதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் முடிவு செய்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் இது குறித்து முடிவெடுக்க சர்வதேச நிதியத்தின் செயற்குழு சந்திப்பு நடப்பதாக இருந்தது. பின் அது தள்ளிப் போடப்பட்டது. எனினும் தொடர்ந்து வரும் ஜனவரி 11 அன்று இது குறித்து ஆலோசிக்க உள்ளது. பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இவரிடம் 0.5 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது என்ற இந்த ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் விலைவாசி அதிகரிப்பினால் பாகிஸ்தான் […]

பாகிஸ்தானுக்கு 700 மில்லியன் டாலர்கள் நிதி உதவி வழங்க சர்வதேச நாணய நிதியம் முடிவு செய்துள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் இது குறித்து முடிவெடுக்க சர்வதேச நிதியத்தின் செயற்குழு சந்திப்பு நடப்பதாக இருந்தது. பின் அது தள்ளிப் போடப்பட்டது. எனினும் தொடர்ந்து வரும் ஜனவரி 11 அன்று இது குறித்து ஆலோசிக்க உள்ளது. பாகிஸ்தானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இவரிடம் 0.5 சதவீதம் குறைய வாய்ப்புள்ளது என்ற இந்த ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் விலைவாசி அதிகரிப்பினால் பாகிஸ்தான் பொருளாதார நிலையற்ற தன்மையை அடைந்திருக்கிறது என்றும் அது எச்சரித்துள்ளது. கடந்த 2023 டிசம்பர் 22 காலகட்டத்தில் பாகிஸ்தானின் மத்திய வங்கியில் டாலர் கையிருப்பு 853 மில்லியன் டாலர்கள் என்ற அளவில் உயர்ந்தது. இது சர்வதேச நிதியம் விதித்திருந்த இலக்கை விட பாகிஸ்தான் கரன்சியில் 43 பில்லியன் அதிகம்.

கடந்த ஆண்டு சர்வதேச நிதியம் நிதி உதவி அளித்திருந்தது. அப்போது பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. அதனை கடைபிடிக்க பாகிஸ்தான் பல இலவசங்களையும், மானியங்களையும் நிறுத்தியது. இதன் விளைவாக பெட்ரோல், மின்சாரம், உணவு, பால் போன்ற அத்தியாவசிய தேவைகள் வரலாறு காணாத உயர்வை அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu