மிச்சாங் புயலில் பாதித்த குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு விரைவில் நிவாரணம்

February 8, 2024

மிச்சாங் புயலில் பாதிப்படைந்த குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு விரைவில் புயல் நிவாரணம் வழங்கப்பட உள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் மிச்சாங் புயலால் கடுமையாக பாதிப்பிற்கு உள்ளாக்கியது. இதில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் ரூபாய் 6000 நிவாரண நிதி நியாய விலைக் கடைகள் மூலம் ரொக்கமாக வழங்கப்பட்டது. இதில் குடும்ப அட்டை இல்லாதவர்கள், வருமான வரி செலுத்துவோ,ர் அரசு ஊழியர்கள் ஆகியவருக்கு ரொக்க பணம் வழங்கப்பட […]

மிச்சாங் புயலில் பாதிப்படைந்த குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு விரைவில் புயல் நிவாரணம் வழங்கப்பட உள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்கள் மிச்சாங் புயலால் கடுமையாக பாதிப்பிற்கு உள்ளாக்கியது. இதில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் மு. க ஸ்டாலின் ரூபாய் 6000 நிவாரண நிதி நியாய விலைக் கடைகள் மூலம் ரொக்கமாக வழங்கப்பட்டது. இதில் குடும்ப அட்டை இல்லாதவர்கள், வருமான வரி செலுத்துவோ,ர் அரசு ஊழியர்கள் ஆகியவருக்கு ரொக்க பணம் வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இவர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து நேரடியாக தனித்தனியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் நியாய விலை கடைகளில் இதற்கான விண்ணப்பம் வழங்கப்பட்டது. இதில் குடும்ப அட்டை இல்லாத 5.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும் விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கு சென்று நேரடியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்ட தகுதியானவர்கள் கண்டறியப்பட்டனர். இதனை அடுத்து குடும்ப அட்டை இல்லாமல் விண்ணப்பித்தவர்களுக்கு மிச்சாங் புயல் நிவாரணம் விரைவில் வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu