சென்னை மாதவரம் பால் பண்ணையில் ஆவின் பால் உற்பத்தியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆவின் பால் நிறுவனம் சென்னையில் 14.20 லட்சம் லிட்டர் ஆவின் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்து வருகின்றது. இந்நிலையில் அம்பத்தூர் பால்பண்ணையில் 4.20 லட்சம் லிட்டர் பால் பாக்கெட் பாலும், மாதவரம் பால் பண்ணையில் 4.50 லிட்டர் லிட்டர் பால் பாக்கெட் பாலும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாதவரம் பால் பண்ணையில் பால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 2 லட்சம் லிட்டர் ஆவின் பால் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு வெளி மாவட்டங்களில் இருந்து வர வேண்டிய பால் வரத்து பாதிக்கப்பட்டுள்ளது மற்றும் பணியாளர்கள் பற்றாகுறை காரணமாகும். மேலும் இதனால் ஆவின் பால் விற்பனை முற்றிலும் முடங்கியுள்ளது